மருந்துக்குக் கட்டுப்படாத நுண்ணுயிரிகள்
  
Translated

மருந்துக்குக் கட்டுப்படாத நுண்ணுயிரிகள் அல்லது பூஞ்சை போன்ற கிருமிகளால் ஏற்படும் நோய்.

 

“மருந்துக்குக் கட்டுப்படாத நுண்கிருமிப்பிணிகள் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறன. எடுத்துக்காட்டாக, கொல்லிகளை அளவுக்கு அதிகமாகவும் தேவையற்ற முறையிலும் உண்ணுதல். மற்றவர்களிடமிருந்து மருந்துக்குக் கட்டுப்படாத நுண்கிருமிப்பிணிகளைப் பெற முடியும். கொல்லிகளை எதிர்க்கும் நுண்கிருமிகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவக்கூடும்.”

 

“உலகளவில் பல நாடுகளில் மருந்துக்குக் கட்டுப்படாத நுண்கிருமிப்பிணிகள் அதிகரித்து வருகின்றன.”

Learning point

கொல்லிகளை எதிர்ப்பது உங்கள் உடல் அல்ல, நுண்ணுயிரிகள் எதிர்க்கும் திறனை அடைகின்றன

 

உங்கள் உடல் கொல்லிகளை எதிர்க்கும் தன்மையை அடைவதில்லை. ஆனால், நுண்ணுயிரிகள் தங்கள் மரபணுவை மாற்றுவது மூலம் கொல்லிகளை எதிர்க்கும் திறனை அடைகின்றன. கொல்லிகள் நுண்ணுயிர்களைக் குறிவைத்து கொலை செய்கின்றன; அவற்றைப் பலவீனப்படுத்துகின்றன; நுண்கிருமிப்பிணிகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

 

மருந்துக்குக் கட்டுப்படாத நுண்கிருமிப்பிணிகள் உங்களுக்கு வந்தால் பொதுவாக அதை எதிர்த்துப் போராடும் கொல்லிகள் இனி பயனற்று போய்விடும். பின்னர், கடைசி முயற்சியாக குறைவாக அணுகக்கூடிய அல்லது அந்திம கொல்லிகளைப் பயன்படுத்த அவசியம் வந்துவிடும். சில சந்தர்ப்பங்களில், சாத்தியமான செயலில் உள்ள கொல்லிகள் தீர்ந்துவிடும். இதைத்தவிர உங்களிடமிருந்த மருந்துக்குக் கட்டுப்படாத நுண்ணுயிரிகள் உங்கள் குடும்பத்தார்களையும் உற்றார் உறவினர்களையும் தொற்றும்.

 

நுண்ணுயிரிகள் எதிர்க்கும் திறனை அடைய முக்கிய காரணம், அளவுக்கு அதிகமாகவும் தேவையற்ற முறையிலும் கொல்லிகளைப் பயன்படுத்துவதால்தான். நோயாளிகள் தங்கள் மருத்துவர்களிடமிருந்து கொல்லிகளைப் பெறுகிறார்கள். மேலும், சுயமாகவே கொல்லிகளை மருந்துக் கடைகளிலிருந்து வாங்குகிறார்கள். சில சந்தர்ப்பங்களில் தெரிந்தோ தெரியாமலோ கொல்லிகளைத் தவறாக உட்கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக, கொல்லிகளை தீநுண்மங்களால் உண்டாகும் நோய்களுக்கு உட்கொள்வது; கால்நடை வளர்ப்பில் பயன்படுத்தப்படுத்துவது. இவற்றின் விளைவாகக் கொல்லிகளை எதிர்க்கும் நுண்ணுயிர்கள் சுற்றுச்சூழலில் பரவுகின்றன.[1]

 

ஆதார நூற்பட்டியல்

[1]. உலக சுகாதார அமைப்பு (2015). உலகளாவிய நாட்டின் நிலைமை பகுப்பாய்வு: கொல்லிகள் எதிர்ப்பு எதிர்வினை.

World Health Organization (2015). Worldwide country situation analysis: Response to antimicrobial resistance. www.who.int. ISBN 978 92 4 156494 6

Related words.
Word of the month
New word